Categories
மாநில செய்திகள்

30 ஆயுஷ் மருத்துவர்கள் பணி நிறுத்தம்…. கண்ணீருடன் முதல்வருக்கு கோரிக்கை…!!!

மதுரையில் பணியாற்றி வந்த 30 ஆயுஷ் மருத்துவர்கள் திடீரென்று பணி நிறுத்தம் செய்யப்பட்டனர். இதையடுத்து தங்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 11 மாதங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த தங்களை திடீரென்று பணி நிறுத்தம் செய்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் எக்காரணம் கொண்டும் முன்களப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என தமிழக அரசு கூறி வந்த நிலையில், தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்துள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |