பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் 12 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான தேதியை அறிவித்துள்ளார்.
பிரான்சில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 50 சதவீதம் வயதானவர்களுக்கு அந்நாட்டில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் LOT-ல் உள்ள செயிண்ட் சீர்க் லபோபிஎ என்னும் கிராமத்திற்கு சென்றிருந்த நிலையில் 12 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து பேசியுள்ளார். மேலும் அவர் நாட்டில் 30 மில்லியன் மக்களுக்கு வருகின்ற ஜூன் 15-ஆம் தேதிக்குள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிடும் என்பதால், 12 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வருகின்ற ஜூன் 15-ஆம் தேதியில் இருந்து தடுப்பூசிகள் செலுத்தும் பணி துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பள்ளிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படவிருப்பதால் அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பை ஜனாதிபதி மேக்ரான் தற்போது தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று பாதிப்பு பிரான்சில் சற்று குறைந்திருந்தாலும் இந்திய டெல்டா வைரஸ் தொற்று லண்ட்ஸ்-ல் உள்ள டாஸ்-ல் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.