Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும்… கருப்பு பூஞ்சை நோய்… மேலும் ஒருவருக்கு தொற்று…!!

ராமநாதபுரத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு நேற்று முன்தினம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வித்தானூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன்(56) கொரோனா தொற்று ஏற்பட்டு சில தினங்களுக்கு முன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறி இருப்பதாக நேற்று காலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். ஆனால் மருத்துவர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |