Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மைசூரில் இருந்த வந்த ரயில்… பெட்டிகளை சோதனை செய்த போலீசார்… 47 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் மைசூரில் இருந்து வந்த ரயிலில் 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அது யாருடையது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை மைசூரிலிருந்து தூத்துக்குடிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் ரயில் பெட்டிகளை சோதனை செய்துள்ளனர். அப்போது ரயிலில் 2ஆம் வகுப்பு பெட்டியில் சுமார் 47 மதுபாட்டில்கள் கொண்ட ஒரு பெட்டி இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அந்த பெட்டி யார் கொண்டு வந்தது என தெரியவில்லை. மேலும் மது பாட்டில்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் அதனை மதுவிலக்கு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மது பாட்டில்களை யார் கொண்டு வந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |