Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த கனமழை… வெளியில் தாக்கம் குறைந்ததால்… மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை அப்பகுதி முழுவதிலும் பலத்த மழை பெய்துள்ளது.

இதனையடுத்து 1 மணி நேரம் பெய்த கனமழையினால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டுள்ளனர். இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்து மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் அப்பகுதி மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |