Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பண விரயம் ஏற்படும்….! பிரச்சனைகள் இல்லாத நாள்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.!

இன்று வெளிநாட்டு தகவலால் வியப்படைவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய தகவல்கள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும். பிரச்சனைகள் இல்லாத நாள். ஏற்றுமதி துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசாங்கம் மூலம் வரவேண்டிய பணம் வந்து சேரும். முக்கியமான காரியத்திற்கு இன்று நீங்கள் ஒரு முடிவை எடுப்பீர்கள். குழப்பம் விலகி செல்லும். வருமானம் உயர்ந்தாலும் பண விரயமும் அதிகமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பெரிய அளவில் மனதில் கவலைகள் ஏற்படாது. மனதில் நிம்மதி பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமணமாகி குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கக்கூடிய அம்சம் இருக்கின்றது.

இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் ஏற்கனவே பிரச்சினையை கொடுத்து இருக்கும். அந்த பிரச்சனை எல்லாம் இப்போது சரியாகிவிடும். மனமும் தைரியமாக காணப்படும். இன்று மாணவர்கள் கல்வி மீது அக்கறை கொள்வார்கள். கல்வியில் உங்களால் எளிமையாக ஜெயிக்க முடியும். கல்வியில் இருந்த தடையும் விலகிச்செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   1 மட்டும் 7                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |