Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்வது எப்படி !!!

சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1/2  கிலோ

மட்டன் – 1/2  கிலோ

வெங்காயம் – 1/4 கிலோ

தக்காளி –  1/4  கிலோ

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 3

தயிர் – 1 கப்

இஞ்சி பூண்டு விழுது –  1/2  தேக்கரண்டி

புதினா – தேவையான அளவு

பட்டை   – 1

கிராம்பு  – 1

ஏலம் -1

கொத்துமல்லி இலை  – தேவையான அளவு

பிரியாணி இலை – 1

எலுமிச்சை  –  1

உப்பு தூள் – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

Ambur Mutton Biryani க்கான பட முடிவு
செய்முறை:

முதலில் அரிசியை ஊற வைத்து கொள்ள வேண்டும்.  மட்டனை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  பட்டை, ஏலம்,  கிராம்பு , பிரியாணி இலை போட்டு வதக்கி  வெங்காயம்  மற்றும்  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். பின்னர்  மிளகாய் தூள், மிளகாய் ,  புதினா, தயிர் , தக்காளி , கொத்துமல்லி இலை  , உப்பு, மற்றும் மட்டன் சேர்த்து நன்கு கிளறி வேக விட  வேண்டும். ஒரு டம்ளர் அரிசிக்கு 1  1/4 டம்ளர்  தண்ணீர் அளந்து ஊற்ற  வேண்டும்.தண்ணீர்  கொதித்ததும் அரிசியை போட்டு கொதிக்கவிட்டு  நெய், எலுமிச்சை பிழிந்து  20 நிமிடம் தம்மில் விட்டு  இறக்கினால்  சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி தயார் !!!

Categories

Tech |