தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை ஒழிக்க தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் நம் மாநிலத்திலேயே #CovidVaccines தயாரிப்பதில் முனைப்பாக இருக்கும் தமிழ்நாடு அரசு அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனம் தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.