இலங்கை வாலிபர் லாட்டரி டிக்கெட்டின் மூலம் 80 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக வென்றுள்ளார்.
துபாய் நாட்டில் சிவில் இன்ஜினியரான இலங்கை நாட்டை சேர்ந்த ரசிகா ஜேடிஎஸ் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவியும், குழந்தைகளும் கொழும்புவில் உள்ளனர். இதற்கிடையே இவர் கடந்த மே 29 ஆம் தேதி லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் இவர் வாங்கிய டிக்கெட்டினுடைய 213288 என்கின்ற எண்ணிற்கு, அபுதாபியில் நடைபெறும் பிக் டிக்கெட் அபுதாபி என்ற குழுக்களில் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இந்தப் பரிசுத்தொகையினுடைய இலங்கை மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் ஆகும். இதுகுறித்து தகவலறிந்தவுடன் ரசிகா என் வாழ்க்கையே மாறப் போகிறது என்று கூறியுள்ளார்.