தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 7-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு என்னென்ன தளர்வுகள் அறிவிப்பது என்பது குறித்து தலைமைச் செயலாளர் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ளார். இதுபற்றிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.