டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே சாற்றுதல் செல்லுபடியாகும் என்பது வழக்கம். அதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த நிலையில் மத்திய கல்வித் துறை அமைச்சகம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2011 ஆம் ஆண்டு முதல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும்.
ஏழு ஆண்டுகள் நிறைவுபெற்றவர்களுக்கு புது சான்றிதழை திருத்தித் தருதல் அல்லது புதிதாக வழங்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.