தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு சில கட்சிகள் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்ற சில இடங்களில் மட்டும் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு மாதத்திற்குள் அதாவது ஜூன் 2ம் தேதிக்குள் வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.