தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பலரும் தமிழக முதல்வரின்நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்து வரும் நிலையில், நடிகர் சூரி முதல்வரின் நிவாரண நிதிக்கு தனது சார்பில் 10 லட்சத்துக்கான காசோலையை மற்றும் தனது மகள்-மகன் சார்பில் 25 ஆயிரத்துகான ரொக்கத் தொகையைப் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.