Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் கூடுதல் அரிசி…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு 4000 ரூபாய் நிதி உதவி மற்றும் 13 மளிகைப் பொருள்களை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் மத்திய அரசின் கூடுதல் அரிசியை நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளிகளுக்கும், ஒருவருக்கு 5 கிலோ வீதம் மே, ஜூன் இரு மாதங்களுக்கு கூடுதல் அரிசியை இலவசமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் தமிழகத்தில் கூடுதல் அரிசி விநியோகம் செய்யப்பட உள்ளது.

Categories

Tech |