சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து ஆன்லைன் வகுப்பில் மாணவிகளை படம் பிடித்து ஆபாசமாக மார்பிங் செய்து அவர்களுக்கு அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைதான ஆசிரியர் ராஜகோபாலன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பல ஆசிரியர்கள் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.