Categories
உலக செய்திகள்

இவர் போட்ட கருத்தையே நீக்கிட்டாங்களா…? நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு…. நைஜீரியாவில் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள்….!!

நைஜீரிய அதிபர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

நைஜீரியா நாட்டினுடைய அதிபராக முகமது புகாரி இருந்து வருகிறார். இதனிடையே சிவில் போரை ஏற்படுத்தும் விதமாக நைஜீரியாவினுடைய அரசாங்கத்திற்கு எதிராக பல நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நைஜீரிய நாட்டினுடைய அதிபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போலும், வன்முறையை தூண்டுவது போலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தற்போது தவறாக நடந்து கொள்ளும் வாலிபர்களுக்கு நைஜீரியாவில் நடந்த உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட அழிவுகளையும் இழப்புகளையும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை என்றுள்ளார்.

மேலும் 30 மாதங்களாக எங்களுடனே இருந்தவர்களும், போரை சந்தித்தவர்களும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் செயல்படுவார்கள் என்று தெரிவித்தார். இவருடைய இக்கருத்து 1967-70 வரை நைஜீரியா நாட்டில் நடந்த உள்நாட்டு சண்டையை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அதிபர் வெளியிட்ட இக்கருத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்கின்ற எண்ணத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளதால் ட்விட்டர் நிறுவனம் அதனை சமூக வலைத்தள பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது.

Categories

Tech |