நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் நோய்த்தொற்று குறைந்து வருவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 7ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.500 கோடியில் சிறப்பு நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.