நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டு வருகின்றது.
அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 15-ஆம் தேதி வரை தளர்வுற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மூன்று மணிநேரம் உணவகங்கள் செயல்பட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். அதன்படி தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் மூலம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.