Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 801 பேர் பாதிப்பு… 740 பேர் வீடுதிரும்பியுள்ளனர்… சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து 740 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்றைய கணக்கெடுப்பின்படி புதிதாக 801 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதிலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,816 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து 7,512 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 740 பேர் கொரோனவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 27,023 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு சிகிச்சை பலனின்றி இதுவரை 281 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருவதால் பொதுமக்கள் ஊரடங்கு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று  சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |