தேனி மாவட்டத்தில் கொரோனா கணக்கெடுப்பில் நேற்று ஒரே நாளில் 481 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நேற்றைய கணக்கெடுப்பின்படி புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதிலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37,849 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 528 பேர் கொரோனவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து 5,471 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த கொடிய வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி நேற்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துகொண்டும், வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வதால் மட்டுமே கொரோனவை கட்டுப்படுத்தமுடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.