சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகர் சரத்குமார் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஐயா. இயக்குனர் ஹரி இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரகாஷ்ராஜ், வடிவேலு, நெப்போலியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்நிலையில் இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் நடிகை நவ்யா நாயர்.
இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த நவ்யா நாயர் மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்ததால் ஐயா படத்தை நிராகரித்ததாக கூறியுள்ளார். இதேபோல் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்திலும் தனக்கு வந்த வாய்ப்பை நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.