Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடித்துள்ள புதிய படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!!!

நடிகர் தனுஷ் நடித்துள்ள “என்னை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

“என்னை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரிக்கும் இப்படத்தை தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

Image result for ennai nokki paayum thotta

2016-ம் ஆண்டு தொடங்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாரானது. ஒருசில காரணங்களினால் இப்படம் வெளியாவதில் சில தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Categories

Tech |