Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள்… புதிய கொரோனா சிகிச்சை மையத்தை… திறந்து வைத்த தமிழக முதலமைச்சர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் நேற்று திறந்து வைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் நோய் தாக்கத்தை பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிகிச்சை வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் 1,500 படுக்கைகள் தயாராக உள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் 18 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து  கூடுதலாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள தனியார் பள்ளியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அங்கு 200 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தை நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் புதிதாக திறக்கப்பட்ட சிகிச்சை மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |