Categories
உலக செய்திகள்

பொருளாதார மீட்புக்கான திட்டங்கள்… சீனாவுடன் பரபரப்பு பேச்சுவார்த்தை… வெளியான முக்கிய தகவல்..!!

சீன துணை பிரதமருடன் பொருளாதார மீட்புக்கான திட்டங்கள் குறித்து அமெரிக்க மந்திரி திடீர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார.

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவல் குறித்த விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஆனால் தற்போது அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சி நிலவி வருவதால் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, அதனை தொடர்ந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் சீன துணை பிரதமர் லியு ஹீயுடன், அமெரிக்க கருவூல மந்திரி ஜேனட் யெல்லன் திடீரென நேற்று முன்தினம் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க கருவூல மந்திரி ஜேனட் யெல்லன், அமெரிக்க நலன்களை கொண்ட பகுதிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், பொருளாதார மீட்புக்கு வலுவான ஆதரவளிக்கும் ஜோ பைடன்- கமலா ஹாரிஸ் நிர்வாகத்தின் திட்டங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதே சமயம் சீன துணை பிரதமர் லியு ஹீயுடன், பிரச்சனையை ஏற்படுத்தும் விஷயங்களை எவ்வாறு வெளிப்படையாக எதிர்கொள்வது என்பது குறித்து விவாதித்துள்ளார்.

மேலும் “ஜேனட் யெல்லன், துணை பிரதமர் லியுடன் எதிர்கால பேச்சுவார்த்தைகளை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டுள்ளார்” என்று அமெரிக்க கருவூலத்துறை இந்த பேச்சுவார்த்தை குறித்த அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசிக்கு, குடியரசு கட்சி எம்.பி.க்கள் 200 பேர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியே கொரோனா தொற்று நோயை ஏற்படுத்தியதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |