சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் அரிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா என்ற 17 வயதுடைய மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ரூபா கடுமையான வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிறு வலி குணமடையவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சிறுமி ரூபா தனது வீட்டு தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரூபா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.