அரிவாளை காட்டி மிரட்டி கூலித் தொழிலாளியிடம் இருந்து 3 வாலிபர்கள் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் அப்பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் முருகனை வழி மறித்துள்ளனர். அதன்பின் அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி முருகன் வைத்திருந்த 3500 ரூபாய் பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து முருகன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் போஸ் நகரில் வசிக்கும் கணேசன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து முருகனிடம் வழிப்பறி செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முருகனை கைது செய்த காவல்துறையினர் அவரது நண்பர்களான சின்னராசு மற்றும் மருதுபாண்டி ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.