Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனத்தில் அடிபட்ட புள்ளிமான்… உடற்கூறு ஆய்வு செய்த பின்… காட்டு பகுதிக்குள் அடக்கம் செய்த வனத்துறையினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் வாகனத்தில் அடிபட்ட புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு அடக்கம் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள வதுவார்பட்டி ஆர்.ஆர். நகர் சாலையில் புள்ளிமான் ஓன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த படி காணப்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வனச்சரகர் கோவிந்தன், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு, மற்றும் வன பாதுகாப்பாளர் ஜெயேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளிமானை மீட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பந்தல்குடி கால்நடை மருத்துவர் சத்தியபாமா முன்னிலையில் மானை உடற்கூறு ஆய்வு செய்த பிறகு காட்டுப்பகுதிக்குள் சென்று மானை அடக்கம் செய்துள்ளனர்.

Categories

Tech |