இத்தாலியில் உள்ள Gucci நிறுவனம், ஒரு குர்தாவின் விலை 2,50,000 என்று குறிப்பிட்டிருந்ததை கண்ட இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் என்ற நகரத்தில் Gucci என்ற பேஷன் ஹவுஸ் அமைந்திருக்கிறது. இதில் மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். காலணிகள், அழகு சாதன பொருட்கள், உடைகள், வாசனை திரவியங்கள், கைப்பைகள் உட்பட பல பொருட்கள் ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை மட்டுமே இருக்கும்.
இந்நிலையில், இந்தியாவில் மக்கள் சாதாரணமாக அணியக்கூடிய குர்தா உடை இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் சுமார் 3500 டாலர் விலை குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது இந்திய ரூபாய்க்கு 2,50,000 ஆகும். அதாவது இந்த குர்தாவிற்கு ஆர்கானிக் லைனியென் கப்டான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
மேலும் இதில் இத்தாலியின் ஃப்ளோரல் எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கிறதாம். மேலும் மொத்த தொகையையும் கொடுக்க முடியாவிடில் தவணை முறையில் வாங்கலாம் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இணையதளங்களில் இதைப் பார்க்கும் பெரும்பாலானோர், இந்தியாவில் 500 ரூபாய்க்கு மலிவாக இந்த குர்தா கிடைக்கும்.
இதனை அநியாயமாக, இத்தாலி 2,50,000க்கு விற்பனை செய்கிறது. அப்படி இதில் என்ன சிறப்பு உள்ளது என்று கேள்வி எழுப்புகின்றனர். எவ்வளவு கலை வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டாலும் இவ்வளவு விலை கொடுத்து உடை வாங்குவதை நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது என்று புலம்புகிறார்கள்.