தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் பலனாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தொற்று குறையவில்லை.
இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து கொரோனா குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கவும், அதிகமுள்ள கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், முழு ஊரடங்கை மேலும் 1 வாரம் நீட்டிக்க மருத்து நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.