விருதுநகர் மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநிலங்களிலிருந்து ரயில் மூலம் சாத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி வருவதாக அம்மாபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி, அம்மாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் சாத்தூர் ரயில் நிலையம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நத்தத்துப்பட்டியை சேர்ந்த முருகன்(31) மற்றும் பால்பாண்டி(24) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும், அவர்களிடம் 90 வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர்களை கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.