நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல கோடி ரூபாய் செலவில் நிதி ஒதுக்கி உள்ளது. அந்தவகையில் கேரளாவில் கொரோனா நிவாரணங்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த தொகையில் கடன்களுக்கான வட்டி மானியமாக ரூ.8,300 கோடி, அவசர மருத்துவ பணிகளுக்கு ரூ.2,800 கோடி, நேரடி உதவித் தொகையாக ரூபாய் 8,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள விஜயன், கொரோனா முதல் அலையில் நாட்டுக்கே கேரளா ஒரு முன் மாதிரியாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.