தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்துமுதல்வர் ஸ்டாலின் உடனான ஆலோசனையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுனர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள தளர்வுகள் வழங்காமல் ஊரடங்கு நீட்டிக்கவும், தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகள் வழங்கலாம் என்றும் அதிகாரிகள் முதல்வருக்கு பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.