Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி உடல் டெல்லி நிகாம் போத் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது..!! 

மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட்டில்  தகனம்  செய்யப்படது. 

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிற்பகல் சிகிச்சை  பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி ட்விட்டரில், இரங்கல் தெரிவித்திருந்தார்.

 

இதையடுத்து  டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து  இன்று காலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல்   கொண்டு வரப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய செயற்குழு தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தலைமையகத்தில் அருண் ஜெட்லிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் மத்திய அமைச்சர்கள், மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.அத்துடன் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோரும் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய பின் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து அருண் ஜெட்லியின் உடல்  இறுதி ஊர்வலமாக   நிகாம் போத் உடல் தகனத்திற்கு காட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. நிகாம்போத் காட்டில் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்மிரிதி இரானி, ராம் விலாஸ் பாஸ்வான், எல்கே அத்வானி  உள்ளிட்ட தலைவர்களும் இறுதி சடங்கில் பங்கேற்றனர். இறுதி சடங்கில் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு அழுதார். 

மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்,   உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் இதில் பங்கேற்றனர். மேலும் எதிர்க்கட்சி  குலாம் நபி ஆசாத் உட்பட எதிர்க்கட்சி தலைவர்களும்  பங்கேற்றனர். அருண் ஜெட்லி உடலுக்கு குடும்பத்தினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போத் காட் மயானத்தில் இறுதி சடங்குகள் நடத்தினர். பின்னர் முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Categories

Tech |