காஷ்மீர் மாநிலத்தின் பாலக்கோட் மற்றும் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் திரைப்படமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்புதிய திரைப்படத்தை பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தயாரிக்கவுள்ளார். இவ்வருட இறுதியில் இத்திரைப்படத்தை தொடங்கவுள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பாகிஸ்தான் விமானப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கான தேர்வும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.