Categories
மாநில செய்திகள்

சசிகலாவின் திட்டம் ஒரு காலத்திலும் நடக்காது…. ஈபிஎஸ் சூளுரை….!!!!

அதிமுக தலைமை செயலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்தது குறித்து செய்தியாளர்களுக்கு ஈபிஎஸ் பேட்டி அளித்தார். அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொடர்ந்து பேசுவது போன்ற ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா அதிமுக கட்சியில் இல்லை.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது தான் அரசியலில் இருந்து விலகி விட்டதாக அறிக்கை வெளியிட்டார். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார். அது ஒரு காலத்திலும் நடக்காது. சசிகலா அதிமுகவில் இல்லை. அமமுகவினருடன் தான் அவர் பேசி வருகிறார். சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக் கூடாது என்பதுதான் கட்சியினரின் விருப்பம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் சூளுரைத்துள்ளார்.

Categories

Tech |