மதுரையில் விரைவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகள் துறையை உருவாக்க முடியுமா? என்று ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்காலிக வெளிப்புற நோயாளிகள் துறை அமைத்தால், கருவுற்ற பெண்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், இருதய நோயாளிகள் சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Categories