Categories
உலக செய்திகள்

கண்ணிற்குப் புலப்படாத சிற்பம்…. நான் என்று தலைப்பு வைத்த கலைஞர்…. ஏலத்தில் எடுத்து சென்ற நபர்….!!

கண்களுக்குத் புலப்படாத சிற்பம் $18,000-க்கு விற்பனையான சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் சிற்பக் கலைஞரான சல்வடோர் கராவ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கண்ணிற்கு புலப்படாத சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த சிற்பத்திற்கு கராவ் நான் என்ற தலைப்பு வைத்து, அதனை அவர் வெற்றிடம் என்று அழைக்கிறார். இந்த சிற்பம் ஏலத்திற்கு விடப்பட்டதையடுத்து அதனை ஆர்ட் நெட் என்பவர் $18,000 கொடுத்து ஏல மையத்திலிருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.

இதுகுறித்து கராவ் கூறுகையில், இந்த சிற்பம் உங்களிடம் கற்பனை சக்தியிருப்பதை நம்பாதவர்களை கூட முயற்சி செய்ய வைப்பதற்கான படைப்பாகும் என்றுள்ளார். நாம் அனைவரும் இதுவரை கண்ணால் கண்டிராத கடவுளை சிற்பமாக செதுக்குவது இல்லையா அது போல தான் இந்த சிற்பமும் என்றுள்ளார்.

Categories

Tech |