நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை காஜல் அகர்வால் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கார்த்தி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . கடைசியாக இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
FILM ANNOUNCEMENT: KAJAL AGGARWAL IN & AS #UMA… #KajalAggarwal will head the cast of #Uma… A slice of life film… Directed by ad filmmaker Tathagata Singha… Produced by Avishek Ghosh and Mantraraj Paliwal [#Miraj Group]… Remaining cast will be announced later. pic.twitter.com/E62o2B8KOM
— taran adarsh (@taran_adarsh) June 4, 2021
தற்போது நடிகை காஜல் அகர்வால் இந்தியன்-2, ஹே சினாமிகா, ஆச்சார்யா உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் புதிய பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘உமா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் டதகட்டா சிங்கா இயக்கவுள்ளார் . அவிஷேக் கோஷ் மற்றும் மந்த்ரராஜ் பலிவால் இந்த படத்தை தயாரிக்கிறார்கள் . மேலும் அதில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.