Categories
உலக செய்திகள்

இது நம்மளோட மனைவியா இருக்குமோ…? கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சீனாவில் நடந்த திட்டமிட்ட சதி….!!

சீனாவில் சமூக வலைத்தளம் பார்த்துக்கொண்டிருந்த கணவர் தன்னுடைய மனைவிக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெறும் வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சீனாவில் 35 வயதுள்ள யின் செங் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் நடத்துவதற்கு முடிவெடுத்த அவருடைய பெற்றோர்கள் பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் யின்செங் திருமண தரகரான லீ என்பவருடைய உதவியை நாடினார். அப்போது லீ ஏற்கனவே திருமணம் முடிந்த பெண் இருப்பதாக யின் செங்கிடம் கூறியுள்ளார். இதற்கு யின்செங் லீயிடம் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நானா என்ற பெண்மணியை யின் செங்கிற்கு லீ அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நானாவை தன்னுடைய ஊருக்கு வருமாறு அறிவுறுத்திய யின் செங் அவருக்கு சுமார் 1000 காசுகளை அனுப்பி வைத்துள்ளார். அதன்பின் யின் செங் லீயிடம் தனது பெற்றோர்கள் நானாவை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நானாவினுடைய ஊரில் பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெறுவதாகவும், அதனைக் கட்டும் நிறுவனம் நிலங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் நானா மற்றும் செங்கிற்கிடையே எளிமையான முறையில் திருமணம் நடந்தது. அத்திருமணத்தை அவர்கள் பதியவில்லை.

இதற்கிடையே திருமணத்தின்போது யின்செங் நானாவிற்கு இந்திய மதிப்பீட்டில் சுமார் 17,00,000 ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளார். அதன்பின் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நானா திரும்பி வரவே இல்லை. அதனால் யின்செங் நானாவிற்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. இதனையடுத்து ஒரு நாள் யின்செங் பொழுதைக் கழிப்பதற்காக சமூக ஊடகத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது திருமண வீடியோ ஒன்று வந்துள்ளது. அதிலிருக்கும் மணப்பெண் தன்னுடைய மனைவி போல் இருப்பதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து விசாரிப்பதற்காக ஜிக்சியாவோவா நகருக்கு சென்றுள்ளார். அதன்பின் யின்செங் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் லீயும் நானாவும் இணைந்து திருமணம் செய்ய விரும்பும் ஆண்களிடம் மிகப்பெரிய பண மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |