Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. அதிரடி உத்தரவு….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரின் பேரில் ஆசிரியர்  கைது செய்யப்பட்டார். அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலனை ஜூன் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |