நடிகர் விமல் தனது மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான பசங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் விமல் . இதை தொடர்ந்து இவர் களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் கன்னிராசி திரைப்படம் வெளியாகியிருந்தது.
We are Very Happy and Joyful to Introduce Our Little Angle, #AadhvikaVemal, on Her 1st Wonderful Birthday🎂#daughterlove 💕 pic.twitter.com/uUIxlXO4wP
— Actor Vemal (@ActorVemal) June 4, 2021
இந்நிலையில் நடிகர் விமல் இன்று தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் தனது மனைவி, மகள் மற்றும் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.