மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் பணியில் ஈடுபட்டுவரும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுடன் இணைந்து மூத்த பயிற்சி மருத்துவர்களும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் நடத்திய போராட்டம் சட்டவிரோதமானது என அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த 3000 இளம் மருத்துவர்கள் தங்கள் அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளனர். கொரோனா பரவும் இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories