Categories
உலக செய்திகள்

“இந்த கரப்பான் பூச்சியை எப்படியாவது காப்பாறுங்கள்!”.. நெகிழ்ந்து போன மருத்துவர்..!!

தாய்லாந்தில் கரப்பான் பூச்சிக்காக இரக்கப்பட்டு, ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நம்மில் பெரும்பாலோனோர் வீட்டிற்குள், கரப்பான் பூச்சி வந்தால் அதனை அடித்து தூக்கி வெளியே வீசி விடுவோம். நாய் போன்ற பெரிய உயிரினங்களை நாம் நேசிக்கும் அளவிற்கு சிறிய உயிரினங்களை கவனிப்பதில்லை. எனினும் பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு உயிரும் முக்கியமானது தான். இதனை நிரூபித்திருக்கிறார் ஒரு நபர். தாய்லாந்தில் வசிக்கும் அவர்  சாலையில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது கரப்பான் பூச்சி ஒன்று அடிபட்டு கிடந்திருக்கிறது. அதனை பார்த்தவுடன், அதன் உயிரை காப்பாற்ற நினைத்திருக்கிறார். எனவே உடனடியாக அதனை அங்குள்ள சாய் ராய் விலங்கு நல மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அங்கு மருத்துவரிடம் சென்று கரப்பான் பூச்சியை காப்பாற்றும்படி கூறியிருக்கிறார்.

இதனை கேட்டவுடன் வியந்து போன மருத்துவர், அதற்கு சிகிச்சையளித்து காப்பாற்றியிருக்கிறார். அதற்காக அவர் கட்டணம் வாங்கவில்லை. இதுகுறித்து அந்த மருத்துவர் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் “ஒரு நபர் சாலையோரத்தில் கரப்பான் பூச்சி அடிப்பட்டு கிடந்ததை கண்டு மனமுடைந்து அதனை விலங்கு நல மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.

இது சிரிப்பதற்காக அல்ல. ஒவ்வொரு உயிரினத்தின் உயிரும் மிக முக்கியமானது. அந்த உயிரினத்தின் மீது அவர் வைத்திருந்த இரக்கம் மற்றும் பரிதாபத்தை காட்டுகிறது. உலகில் இவரைப் போன்றோர் அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கரப்பான் பூச்சி, உயிர் பிழைக்க 50% வாய்ப்பு இருந்திருக்கிறது. எனவே மருத்துவர் அதனை ஆக்சிஜன் இருக்கும் ஒரு கலனில் வைத்திருக்கிறார். அதன் பின்பு அந்த கரப்பான் பூச்சியை அவரிடம் கொடுத்திருக்கிறார். மேலும் தேவைப்பட்டால், மீண்டும் கரப்பான் பூச்சியை கொண்டு வருமாறும் மருத்துவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |