திருநெல்வேலி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் ஆபாச வார்த்தையில் பேசியதால் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மானுரில் ஒரு தெருவில் சில இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் வருவதை கண்டு தப்பியோடியதில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து இளைஞரின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வருமாறு இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இளைஞரின் பெற்றோருக்கும் இன்ஸ்பெக்டர் செல்வகுமாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த போலீசார் வாலிபரின் பெற்றோரை ஆபாச வார்த்தையில் திட்டியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதனையடுத்து இளைஞனின் பெற்றோர் நெல்லை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரியிடம் சப்-இஸ்பெக்டர் குறித்து புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சூப்பிரண்டு அதிகாரி மணிவண்ணன் ஆபாச வார்த்தையில் திட்டிய சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரை உடனடியாக வள்ளியூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.