மருத்துவமனையில் வேலை பார்த்த மருத்துவரின் காரின் நான்கு சக்கரங்களை கழட்டி விட்டு அதற்கு பதிலாக செங்கலை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பதான்கோட் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆகாஷ் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல தயாராகி தன் காரை எடுப்பதற்காக கார் பார்க்கிங்க்கு வந்துள்ளார்.
அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திருடர்கள் அவர் காரில் உள்ள நான்கு சக்கரங்களையும் கழட்டிவிட்டு அதற்கு பதிலாக செங்கலை வைத்து முட்டு கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் அருகில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து உள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.