Categories
தேசிய செய்திகள்

600 பெண்கள்…16 மாநிலம்…. 2000 போட்டோ, வீடியோ…. பெண்களை நிர்வாணமாக்கிய கொடூரன்…!!

லட்சக்கணக்கான சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களின் நிர்வாண படங்களை வாங்கிய சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர் கைதாக்கியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டியான சைபராபத் உட்பட்ட பகுதி மியாபூர் . இங்குள்ள காவல்நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இளம்பெண் புகார் ஒன்றை அளித்தார்.அதில் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி தனது நிர்வாண படத்தை வாட்ஸ்அப் வீடியோ காலில் ஒருவர் பெற்றதாகவும், அதனை வைத்து மிரட்டுவதாகவும் கூறி இருந்தார். பின்னர் போலீஸார் சைபர் கிரைம் மூலமாக விசாரணையை தொடங்கினர்.

miyapur police station

தெலுங்கானா சைபர் கிரைம் போலீசாரின் நான்கு மாதங்களாக தேடுதல் வேட்டை நடத்தி இளம் பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய நபரை சென்னையில் வைத்து கைது செய்தனர்.பிரதீப் என்ற பெயரின் அறிமுகமான அந்த நபரின் உண்மையான பெயர் கிளைமன் ராஜ். இவன் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த மின்பொறியாளர், இவனது மனைவியும் மின்பொறியாளர் என்று கூறப்படுகிறது. போலீஸார் கிளைமன் ராஜ்ஜீன் செல்போன் மற்றும் மடிக்கணினியை ஆராய்ந்தபோது தெலுங்கானா போலீசார் அதிர்ந்து போயினர்.கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் நிர்வாண வீடியோக்கள் , இரண்டாயிரத்துக்கும் அதிகமான நிர்வாண புகைப்படங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

Representational image

அவனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.கணவனும் மனைவியும் மென்பொறியாளர் என்பதால் இரவு ஷிப்டில் பணியாற்றி இருக்கிறான்.இவன் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது அவனது மனைவி பணிக்கு புறப்பட்டு சென்று விடுவாள். வீட்டில் தனியாக இருக்கும் அவன் இளைய தனமாய் இளம் பெண்களுக்கு காதல் வலை விரித்து உள்ளான். பிரபல வேலை தேடும் இணையதளத்தில் தன்னை நிறுவனத்தின் HR  என பதிவு செய்து பிரபல நட்சத்திர விடுதிக்கு இளம் பெண் வரவேற்பாளர் தேவை எனவும் விளம்பரம் வெளியிட்டு விபரீத கைவரிசையில் ஈடுபட்டதாக மியபூர் போலீசார் தெரிவித்தனர்.

Image result for Telangana police have arrested software engineer Clement Raj Cheziyan, who worked at a leading IT firm in Chennai.

முதலில் தாம் சேகரித்த செல்போன் எண்களில் இளம் பெண்களுடன் தொடர்பு கொண்ட இவன் தங்களது நட்சத்திர விடுதிக்கு லட்ச ரூபாய் சம்பளத்தில் வரவேற்பாளர் தேவை எனக் கூறி தொலைபேசியிலேயே இன்டர்வியூ செய்திருக்கிறான்.பின்னர் தங்கள் புகைப்படத்தை நம்ப இயலாது என்றும், எனவே தங்கள் நிறுவன பெண் HR வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்வார் என்றும் கூறி இணைப்பை துண்டித்து விடுவான். மீண்டும் பெண் HR போல அவனே அந்த இளம் பெண்களிடம் வாட்ஸ் அப்பில் சேட் செய்வான். புகைப்படங்களை அனுப்பும் பெண்களிடம் தங்களது உடல் அமைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் தானும் ஒரு பெண்தான் என்பதால் கவலை கொள்ள வேண்டாம் என சேட்டிங் செய்து நம்ப வைத்துள்ளான்.

இதனை நம்பி பெண்களும் தங்களது முழு உடல் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி இருக்கின்றனர். சில பெண்களிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் அழைத்து நிர்வாண வீடியோவை போனில் பதிவு செய்து வைத்துள்ளான். சில பெண்கள் சாமர்த்தியமாக தவிர்த்துள்ளனர். தன்னிடம் வீடியோவில் சிக்கும் பெண்ணிடம் வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வரவைத்து ஆசைக்கு இணங்க வைத்ததோடு , பணமும் வங்கியுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.அவனது மடிக்கணினியில் இருந்து தமிழ்நாடு , ஆந்திரா , தெலுங்கானா உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்களின் வீடியோக்கள் இருப்பதாகவும்,  இதில் அதிகபட்சமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த 60 இளம்பெண்கள் ஏமாந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |