ரயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் எக்ஸ்பிரஸில் மதுபாட்டில்கள் கடத்துவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து எக்ஸ்பிரஸ் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது காவல்துறையினர் அதில் சோதனை செய்துள்ளனர். அப்போது எஸ் 9-வது பெட்டியில் திருச்சியை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரும் எஸ் 7-வது பெட்டியில் திருவாரூரை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரும் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் மதுபாட்டில்களை கடத்தி சென்றவரை சேலம் மதுவிலக்கு காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரஜினிகாந்திடம் இருந்து 220 மது பாட்டில்களையும், ஜெய்கணேசிடமிருந்து 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.