ஆண்டுதோறும் உலகின் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து திரையிடும் கான் திரைப்படவிழா இந்த வருடம் ஜூலை 6 முதல் ஜூலை 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா அதிகமாக பரவி வருவதன் காரணமாக இந்த திரைப்பட விழாவில் பங்கேற்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கான் திரைப்பட விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.