Categories
உலக செய்திகள்

காதலியே மகனை கொன்ற கொடூரம்.. மனமுடைந்து கதறி அழுத தந்தை..!!

அமெரிக்காவில் தன் குழந்தையை, தன் காதலியே கொலை செய்ததை அறிந்த தந்தை, கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

அமெரிக்காவை சேர்ந்த Dalton Olson மற்றும் Sarah Olson என்ற தம்பதியின் 6 வயது மகன் Samuel Olson. தம்பதியர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். எனவே Samuel தாய் மற்றும் தந்தையுடன் மாறி மாறி வசித்து வந்திருக்கிறார். சிறுவனின் தந்தை Dalton, காதலி Theresa Balboaவுடன் வசிக்கிறார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 27-ம் தேதியன்று Samuel மாயமானதாக Dalton கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். அவரின் அருகில் Theresaவும் அழுது கொண்டிருந்தார். தற்போது அவர் தான் சிறுவனை கொன்றுள்ளார் என்று தெரியவந்திருக்கிறது. அதாவது குழந்தை மாயமானதாக குடும்பத்தினர் அனைவரும் பதற்றத்தில் இருந்துள்ளனர்.

அப்போது கடந்த திங்கட்கிழமை அன்று Theresa தன் நண்பரை அழைத்துக்கொண்டு, 70 மைல் தூரம் உள்ள ஒரு கிடங்கிற்கு சென்று, அங்கிருந்து ஒரு குப்பைத் தொட்டியுடன் ஜாஸ்பர் என்ற பகுதியில் இருக்கும் ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளார். அந்த குப்பைத் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த நண்பர், ரகசியமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

எனவே உடனடியாக அந்த ஹோட்டலுக்கு வந்த காவல்துறையினர் குப்பைத்தொட்டியில் பார்த்த போது, சிறுவனின் உடல் இருந்துள்ளது. எனவே காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதாவது சிறுவன் மாயமான 27ஆம் தேதி Theresa கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார். ஆனால் மே 10-ஆம் தேதியன்று சிறுவன் உயிரிழந்ததாக தன்னுடன் அறையில் தங்கியிருந்த நண்பரிடம் கூறியுள்ளார்.

அதன் பிறகு இருவரும் சேர்ந்து, குழந்தையின் உடலை குளிக்கும் தொட்டியில் போட்டு, இரண்டு நாட்களுக்கு பிறகு, குப்பைத் தொட்டியில் போட்டிருக்கிறார்கள். இதை அறிந்தவுடன், கதறி அழுத சிறுவனின் தந்தை Dalton, தன் கூடவே இருந்த காதலி, தன் குழந்தையை கொன்று விட்டதால் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். விசாரணை தொடர்கிறது.

Categories

Tech |