Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொத்தனார்… தீடிரென மயங்கி விழுந்து… பரிதாபமாக உயிரிழப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொத்தனார் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்துள்ள பொட்டல் பகுதியில் வசித்துவந்த அமிர்தராஜ்(56) கொத்தனார் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அமிர்தராஜ் படப்பகுறிச்சிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்த அமிர்தராஜ் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அமிர்தராஜ் உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |